விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனியார் அப்பள கம்பெனியில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளர்கள் 2பேர் உயிரிழந்தனர்.
சூரம்பட்டியில் இயங்கி வரும் தனியார் அப்பள கம்பெனியில் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, D.கடமன்குளத்தை சேர்ந்த ராஜா ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த கம்பெனியில் ஹீட்டர் மெஷின் பொருத்தும் வேலையின் போது அலுமினிய ஏணியை எடுத்துச் சென்ற ராஜா மீது மின்வயர் பட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அவரைக் காப்பாற்ற சென்ற பழனிச்சாமி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் உயிரிழந்தார்.