புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தனியார் மருந்து நிறுவன காசாளரை தாக்கி பணம் பறித்துச் சென்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாஸ்பேட்டை குமரன் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் மருந்து மொத்த விற்பனை நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 5-ம் தேதி நிறுவனத்தில் வசூலான ஒரு லட்சத்து 73ஆயிரம் ரூபாயினை எடுத்துக் கொண்டு வங்கியில் டெபாசிட் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற முகக்கவசம் அணிந்த மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.