பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக, அரசு வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.
விவசாயிகளுக்கும், மனிதன் உயிர்வாழ பரம்பொருளாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதமாக தமிழர்கள் பொங்கல் வைத்து கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை.
மேலும், தமிழ் மாதமான தை மாத பிறப்பே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
வரும் ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல், 16 ஆம் தேதி திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல், அதனை தொடர்ந்து கரிநாள் என்று 4 நாள் விடுமுறை வருகிறது.
இந்நிலையில், 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.
இந்த விடுமுறை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை அப்படி இருக்கும் பட்சத்தில், இதுகுறித்த அறிவிப்பை அரசு தரப்பில் முன்கூட்டியே அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு, பேருந்து மற்றும் ரயில் முன்பதிவு செய்ய உதவியாக இருக்கும் என்று சமூகவலைத்தளங்களில் கருது பகிரப்படுகிறது.
குறிப்பு : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு : சென்னை கோயம்பேடு உள்பட 6 இடங்களில் இருந்து வியாழக்கிழமை (ஜன.12-ஆம் தேதி) முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.