தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 சிலைகள் திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாளரிடம் ஒப்படைப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 6 மாதத்திற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பழங்காலச் சிலைகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு கற்சிலைகள், ஒரு வெண்கல சிலை மற்றும் அதற்கான ஆவணங்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளியிடம் ஒப்படைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.