மும்பை நம் நாட்டில், சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியில், மஹாராஷ்டிரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து இயங்கும் ‘கேர் எட்ஜ்’ என்ற நிறுவனம், மாநில அளவில் சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஏழு காரணிகளை அடிப்படையாக வைத்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு முடிவுகளை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.
இதில், பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மஹாராஷ்டிரா அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் வகிக்கிறது.
இரண்டாவது இடத்தில் குஜராத், மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதேபோல் சிறிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் கோவாவும், அடுத்த இரு இடங்களில் முறையே சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம் இடம்பிடித்துள்ளன.
இந்த அறிக்கையில், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மேற்கு மற்றும் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டிருந்தாலும், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூக உள்கட்டமைப்பு வசதிகளில் அனைத்து மாநிலங்களும் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement