பெங்களூரு-‘ கர்நாடகாவில் நாளை (ஜன.12 ) நடக்கும் தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ‘ஹாப்பள்ளி – தார்வாடில் நாளை 26-வது தேசிய இளைஞர் விழா துவங்கி ஜன.16 வரை நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 பேர் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக கடந்த சிலதினங்களுக்கு முன் ‘தேசிய இளைஞர் திருவிழா’வுக்கான ‘லோகோ’, ‘சின்னத்தை’ முதல்வர் பசவராஜ் பொம்மை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் நாளை ( ஜன.12) சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, ஹூப்பள்ளியில் தேசிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement