காத்மாண்டு : நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த நவ. 20ல் தேர்தல் நடந்தது. சி.பி.என். மாவோயிஸ்ட் மற்றும் நேபாளி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
கூட்டணி உடன்படிக்கையின்படி சி.பி.என். மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் பிரசண்டா பிரதமராக பதவி ஏற்க நேபாளி காங். எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து கூட்டணியில் இருந்த வெளியேறிய பிரசண்டா ஷர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் புஷ்பகமல் பிரசண்டா தலைமையிலான அரசு மீது பார்லி. யில் நேற்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 268 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரசண்டா வெற்றி பெற்றார்.
சற்றும் எதிர்பாராத திருப்பமாக நேபாளி காங். கட்சியும் பிரசண்டாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement