கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சில பேர், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே போட்டு சென்று விடுகின்றனர்.
இதனால், அங்கு இருக்கும் பிளாஸ்டிக்கால் மண் வளம் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், அங்கு இருக்கும் வன விலங்குகளும் பிளாஸ்டிக் பைகளை சில நேரங்களில் உணவாக உட்கொள்வதால், உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தபோதிலும் மலைப்பகுதிகளில் தாராளமாக பிளாஸ்டிக் பொருள்கள் கிடைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து அனைத்து பேருந்துகளையும், வாகனங்களையும் சோதனை செய்யவும் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.