லண்டன், லண்டனில் பெண் நோயாளிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை தந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டருக்கு, நேற்று இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இதே புகார் தொடர்பாக, இவர் ஏற்கனவே மூன்று ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இந்த கூடுதல் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனில், இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் மணீஷ் ஷா,55, கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தன்னிடம் வந்த பெண்நோயாளிகளிடம் பல சோதனைகள் செய்வதாக கூறி, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நான்கு பெண்களுக்கு, 25 முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கிய அந்நாட்டு நீதிமன்றம், இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
ஏற்கனவே, 90 முறை பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில், மணீஷ் ஷாவுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் ஐந்து ஆயுள் தண்டனையை யும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement