ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆ.ர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையின் போது இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து.
தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுமாறு தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க விரும்புவதாகவும் கூறினர். மேலும் ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கட்டாய மதமாற்றம் மிகத் தீவிரமான விவகாரம் என்பதால் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் உதவ வேண்டும் எனவும் தெரிவித்து விசாரணையை பிப்ரவரி 7-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
newstm.in