முக்கிய நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா; மறுக்கும் உக்ரைன்.!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார்.

இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதன் முறையாக கடந்த டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் ஆற்றல் மையங்கள் மற்றும் நீர் வளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அதை சமாளிக்க ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததார்.

உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பல வகையான நவீன ஆயுதங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாடும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான சோலேடாரை கைப்பற்றியதாக ரஷ்யாவின் கூலிப்படை குழுவான வாக்னர் குழு அறிவித்தது. இந்த நகரத்தை கைப்பற்றினால் டான்பாஸில் மேலும் வெற்றிகளுக்கு வழி வகுக்கும் எனக்கூறப்படுகிறது.

மீன் சந்தை அருகே துர்நாற்றம்; புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு – பயணிகள் அவதி!

ரஷ்யாவின் கூலிப்படை வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகொசின் கூறும்போது, இன்று அதிகாலையில் தனது போராளிகள் உக்ரைனின் சோலேடர் நகரத்தை இந்த வாரம் கடுமையான சண்டைக்குப் பிறகு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறினார். நகரத்தின் முழு கட்டுப்பாட்டும் தங்களுக்கு கீழ் வந்ததாக கூறினார்.

முதல்முறையாக இந்தியா – ஜப்பான் போர் பயிற்சி; சீனாவுக்கு செக்.!

ஆனால் வாக்னரின் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கியமான நுழைவாயில் நகரமான சோலேடரை கைப்பற்றியதாக அறிவித்ததை உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரேனிய ராணுவத்தின் மூலோபாய தகவல் தொடர்பு பிரிவு தனது அறிக்கையில், “சோலேடார் நகரம் உக்ரேனியனுடையதாக இருந்தது, இருக்கிறது, எப்போது இருக்கும்” என்று கூறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.