கலிபோர்னியா மாகாணத்தை மொத்தமாக தாக்கிய புயலுக்கு நடுவே, சாலையில் பயணித்த தாயாரும் மகளும் திடீரென்று உருவான குழிக்குள் புதைந்து போன சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளத்தில் புதைந்த தாயார், மகள்
அதிர்ஷ்டவசமாக, துணிவாக செயல்பட்ட மீட்புக்குழுவினரால் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திங்களன்று சுமார் 7.20 மனியளவிலேயே குறித்த சம்பவம் Chatsworth பகுதியில் ஏற்பட்டுள்ளது.
@getty
சாலையில் திடீரென்று 15 அடி பள்ளம் உருவாகி, அதில் இரண்டு வாகனங்கள் சிக்கியுள்ளது.
தாயாரும் மகளும் பயணித்த கார் ஒன்று, அந்த திடீர் பள்ளத்தை கவனிக்காததால், அதனுள் சிக்கியுள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் பிக்கப் டிரக் ஒன்றும் இருவருடன் அந்த பள்ளத்தில் சரிந்துள்ளது. ஆனால் அந்த இருவரும் மீட்புக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு வந்து சேரும் முன்னர் பள்ளத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆனால் அந்த தாயாரும் மகளும், தங்கள் கார் மீது பிக்கப் டிரக் சரிந்ததால், சிக்கிக்கொண்டு, மீள முடியாமல் தவித்துள்ளனர்.
இதனையடுத்து சுமார் 50 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் இணைந்து, அந்த தாயாரையும் மகளையும் மீட்க போராடியுள்ளனர்.
முயற்சிகள் பலனளிக்காமல்
முதற்கட்டமாக அவர்கள் முன்னெடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போயுள்ளது. மட்டுமின்றி, பள்ளத்தில் வாகனங்கள் மேலும் புதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஏணியுடன் குழிக்குள் இறங்கி, ஆபத்தான நிலையில் இருந்த வாகனத்தில் இருந்து தாயாரையும் மகளையும் காப்பாற்றியுள்ளனர்.
@reuters
இருவரும் லேசான காயங்களுடன் காணப்பட்டதால், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், செவ்வாய்க்கிழமை வரையிலும் அந்த வாகனங்கள் இரண்டும் பள்ளத்தில் இருந்து மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், சாலை நடுவே ஏற்பட்ட அந்த பள்ளத்தால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அத்துடன், சாலையில் வழிந்தோடிய வெள்ளம் அந்த பள்ளத்தை நிரப்பும் வகையில் அமைந்தது.
இதனால் அந்த இரு வாகனங்களும் மேலும் புதைந்துபோகும் நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தில் புயலில் சிக்கி 14 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி குடும்பம் உட்பட ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.