பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பொதி ஒன்றில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தீவிரவாத தடுப்பு பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
யுரேனியம் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்த பொதி ஒன்றில் ஒன்றில் சிறிய அளவு யுரேனியம் இருப்பதை வழக்கமான திரையிடல் மூலம் விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
டிசம்பர் 29 அன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் இத்தகைய அசுத்தமான மாசுப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் எல்லைப் படை அதிகாரிகள் அதன் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளை பிரிவைத் தொடர்பு கொண்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
David Dyson
மேலும் பொதியில் உள்ள பொருள் யுரேனியத்தால் மாசுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படை தீவிர விசாரணை
விமான நிலையத்தில் யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக கமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் வழங்கிய தகவலில், அசுத்தமான பொருட்களின் அளவு “மிகச் சிறியது” என்றும், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் “எங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுவரை எங்களின் விசாரணைகளில் இருந்து இது எந்த நேரடி அச்சுறுத்தலுடனும் தொடர்புடையதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Getty Images/iStockphoto
எவ்வாறாயினும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கிடைக்கக்கூடிய அனைத்து விசாரணைகளையும் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.