விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு| Flight urinating case: Shankar Mishra denied bail

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: விமானத்தில் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைதாகியுள்ள போதை நபர் ஷங்கர் மிஸ்ராவக்கு கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ., 26ல் புறப்பட்டது. அப்போது, ‘ குடிபோதையில் ஷங்கர் மிஸ்ர என்பவர், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

latest tamil news

இது குறித்த புகாரில் போதை நபரான ஷங்கர் மிஸ்ராவை பெங்களூரு சென்று டில்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமின் கோரி டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஷங்கர் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.