விரைவில் Wistron iPhone தொழிற்சாலையை கையகப்படுத்த உள்ளது டாடா குழுமம்!

புதுடெல்லி: டாடா குழுமம் தென்னிந்தியாவில் ஐபோன் அசெம்பிளி ஆலையை கையகப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறுவதற்கான நாட்டின் லட்சியங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குழுமத்தின் மென்பொருள் சேவை பிரிவின் உயர் அதிகாரி கூறினார். டாடா குழுமம் தைவானின் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் இந்த செயல்முறையை நன்கு அறிந்த இரண்டு நபர்கள் இது குறித்து கூறுகையில், மார்ச் இறுதிக்குள் டாடா குழுமம் ஒப்பந்தத்தை முடிக்க விரும்புகிறது. இரு நிறுவனங்களும் பல்வேறு சாத்தியமான இணைப்பு முறைகளைப் பற்றி விவாதித்தன, ஆனால் இப்போது டாடா ஒரு கூட்டு முயற்சியில் பெரும்பகுதியை எடுப்பதை மையமாகக் கொண்டது என்று தகவல் அறிந்த அதிகாரிகள் தெரிவித்தனர். விஸ்ட்ரானின் ஆதரவுடன், முக்கிய உற்பத்தி செயல்பாட்டை டாடா மேற்பார்வையிட உள்ளது என்றனர். 

Apple Inc இன் ஐபோன்கள் முக்கியமாக Wistron மற்றும் Foxconn Technology Group போன்ற தைவானிய உற்பத்தி நிறுவனங்களால் அசெம்பிள் செய்யப்படுகின்றன. டாடாவின் ஒப்பந்தம், அமெரிக்காவுடனான அரசியல் பதட்டங்கள் மற்றும் கோவிட் தொடர்பான தடைகளால் ஆபத்தில் சிக்கியுள்ள மின்னணுவியலில் சீனாவின் ஆதிக்கத்தை சவால் செய்ய உள்ளூர் போட்டியாளர்களை உருவாக்கும் இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும்.

இந்திய குழுமம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் உரிய  செயல்முறையை முடிக்க இலக்கு வைத்துள்ளது, இதன் மூலம் அதன் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விஸ்ட்ரானின் பதவியை அரசு சலுகைகளை வழங்கும் திட்டத்தில் முறையாகக் கைப்பற்ற முடியும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். 

$128 பில்லியன் டாடா குழுமம் Apple Inc. இன் தைவானிய சப்ளையர் Wistron Corp. உடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மார்ச் இறுதிக்குள் பெங்களூருக்கு அருகிலுள்ள அதன் அசெம்பிளி தொழிற்சாலையை வாங்க உள்ளது. உப்பு பிஸினஸ் முதல் விமான நிறுவனம் வரை அனைத்திலும் தடம் பதித்துள்ள டாடா குழுமம் தொழில்நுட்பத்தில் அதன் இருப்பை விரிவுபடுத்தி வருகிறது. மேலும் மின்னணுவியலில் சீனாவின் ஆதிக்கத்தை சவால் செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. Zhengzhou இல் உள்ள Foxconn இன் வளாகத்தில் நடந்து வரும் உற்பத்தி நிறுத்தம், சீனாவிலிருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு தொழிற்சாலைகள் மாறும் வேகத்தை விரைவுபடுத்தும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.