வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று மீனவர் வலையில் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல்நண்டு கிடைத்தது. அந்த நண்டை பார்த்ததில் அதன் வயிற்றில் 4 லட்சம் முட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மீனவர்கள், கல்நண்டை பிளாஸ்டிக் பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் சீர்காழி அருகே தொடுவாயிலில் உள்ள ராஜிவ்காந்தி மீன்குஞ்சு பொரிப்பதற்கு அனுப்பி வைத்தனர். பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒரு வாரத்தில் 4லட்சம் குஞ்சுகள் பொரித்ததும் அந்த நண்டு குஞ்சுகள் மீனவர்களின் வாழ்வாதரத்தை பெருக்குவதற்காக கடலில் விடப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.