DIzo அதன் Watch D Pro மற்றும் Watch D Ultra என இரு புதிய ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் உள்ளே Dizo D1 சிப் வசதி மற்றும் Dizo OS உள்ளது. இதன் Ultra மாடல் வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் அலுமினியம் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அல்ட்ரா மாடல் AMOLED ஸ்க்ரீன் வசதி மற்றும் மூன்று ஸ்ட்ராப் கலர் ஆப்ஷன்களுடன்
(Blue, Black, Grey)
கிடைக்கிறது. Realme நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருக்கக்கூடிய இந்த DIzoவின் சமீபத்திய அறிமுகங்களாக இந்த இரு வாட்ச்களும் உள்ளன.
விலை விவரம்
Dizo Watch D Pro 2,699 ஆயிரம் ரூபாய் விலையில் Flipkart மூலம் வரும் ஜனவரி 17 முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் Dizo Watch D Ultra 3,299 ஆயிரம் ரூபாய் விலையில் வரும் ஜனவரி 12 முதல் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.
Dizo Watch D Pro இதில் முதல் முறையாக தனியாக தயாரிக்கப்பட்ட Dizo D1 SoC, தனி GPU மற்றும் நான்கு மடங்கு அதிக RAM வசதி உள்ளது. இதனால் சிறந்த அனிமேஷன் தரம் மற்றும் Scrolling செய்யும்போதும் சிறந்த அனுபவம் நமக்கு கிடைக்கும்.
டிஸ்பிலே இந்த மாடலில் புதிய Dizo OS மற்றும் 1.85 இன்ச் டிஸ்பிலே வசதி உள்ளது. இந்த டிஸ்பிலே 600 நிட்ஸ் அளவிற்கு அதிகபட்ச பிரைட்னஸ் மற்றும் 60HZ refresh rate கொண்டுள்ளது.
சிறப்பு வசதிகள் இந்த வாட்ச் முழு அலுமினியம் பிரேம், ஹார்ட் ரேட் மானிட்டர், SPO2 மானிட்டர், ஸ்லீப், கலோரி, Step tracking என பல வசதிகள் உள்ளன. இதை தவிர இந்த வாட்ச் 110 ஸ்போர்ட்ஸ் மோட் சப்போர்ட், GPS Tracking போன்றவை உள்ளன. இந்த வாட்ச் பேட்டரி நமக்கு 7 நாட்கள் கைகொடுக்கும் என்று Dizo தெரிவித்துள்ளது.
பேட்டரி இந்த வாட்ச்களில் 150 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் வசதி, ப்ளூடூத் காலிங், Noise Cancellation வசதி இடம்பெற்றுள்ளது. இந்த வாட்ச் அனைத்தும் Blue, Black மற்றும் Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த வாட்ச் பேட்டரி நமக்கு 7 நாட்கள் கைகொடுக்கும் என்று Dizo தெரிவித்துள்ளது.
Dizo Watch D Ultra இந்த டாப் மாடல் 1.78 இன்ச் டிஸ்பிலே கொண்டுள்ளது. இந்த வாட்சில் 368×448 Pixels AMOLED டிஸ்பிலே உள்ளது. இந்த வாட்சில் DIzo OS மற்றும் CPU வசதி எதுவும் இல்லை.
சிறப்பு வசதிகள் மற்றவகையில் ஹார்ட் ரேட் மானிட்டர், SPO2 மானிட்டர், ஸ்லீப், கலோரி, Step tracking, 110 ஸ்போர்ட்ஸ் மோட் சப்போர்ட், GPS Tracking, ப்ளூடூத் காலிங் என அனைத்து வசதிகளும் அதன் D Pro மாடலின் வசதிகளாகவே உள்ளன. இந்த D Ultra வாட்ச் கூடுதலாக 10 நாட்கள் வரை நீடிக்கும்.செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்