710 ரஷ்ய வீரர்கள் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ரஷ்யத் துருப்புக்கள் சோலேடார் (Soledar) நகரத்தைக் கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. உப்புச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற கிழக்கு உக்ரேனிய நகரத்தை குறிவைத்து நடைபெற்ற மோதலில் கடுமையான சண்டை நடைபெற்றது இதன் மூலம் தெரியவந்துள்ளது. யின் மையமாக இருந்தது.
உக்ரைனில் உள்ள சோலேடார் நகரில் குடியிருப்புப் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு மேலே கருப்பு மற்றும் வெள்ளை புகை நீண்ட தூரத்திற்கு தெரிவது அச்சங்களை அதிகரித்துள்ளன.
உக்ரைனின் கிழக்கில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரின் கட்டுப்பாட்டை எடுத்துவிட்டதாக, ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுப் பிரிவின் தலைவர் கூறினார், ஆனால் உக்ரைன் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நிலைமை மோசமாகியுள்ளது.
சோலேடார் நகரத்தின் அருகில் உள்ள முக்கிய நகரமான பக்முட் மற்றும் உக்ரைனின் பெரிய கிழக்கு டோன்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சோலேடார் நகரத்தை கைப்பற்றுவது முக்கியம் என்று நினைக்கும் ரஷ்யா, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
போரின் களநிலவரங்களை சரிபார்க்க முடியவில்லை, ஆனால், 710 ரஷ்ய வீரர்கள் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Wealth Lost: டிவிட்டரை வாங்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த மஸ்க்! காரணமோ சோகம்
ஆனால், ரஷ்யாவிற்கு உதவும், வாக்னர் பிரிவுகள் சோலேடரின் முழுப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை நாளை அறிவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், ரஷ்யாவால் சுற்றி வளைக்கப்பட்ட அந்த நகரத்தில் இருந்த உக்ரேனிய வீரர்கள் சரணடைய போதுமான நேரம் கொடுக்கப்பட்டிருந்ததாகாவும் வாக்னர் குழு தெரிவித்துள்ளது.
ஆனால் உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி, செவ்வாய் மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது வழக்கமான வீடியோ உரையில் சோலேடார் நகரத்தை இழந்து விட்டதான செய்தி தொடர்பாக எந்த செய்தியையும் குறிப்பிடவில்லை. அதோடு, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் தேவை என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினார்.
ஆனால் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், “பெரும் இழப்புகளைச் சந்தித்த பிறகும், ரஷ்யா இன்னும் வெறித்தனமாக ஐரோப்பாவின் மிகப்பெரிய உப்பு சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்ற முயற்சிக்கிறது” என்று தெரிவித்திருந்தது.
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வடகிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில், தொடர்ந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்த ரஷ்யா, சோலிடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இரு தரப்புக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பக்முட் நகரைக் கைப்பற்றுவது உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று மாஸ்கோ கருதுகிறது.
மேலும் படிக்க | Varisu Movie: வாரிசு படத்திற்கு இலவச டிக்கெட்… ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ