"அந்த எண்ணத்தில்தான் வீட்டை விட்டு வெளியேறும்போது அழுதேன்!" – பிக் பாஸ் ரச்சிதா

`சின்னத்திரை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரச்சிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டில் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்பார் என்கிற கேள்வி மக்களிடம் இருந்து கொண்டே இருந்தது.

ரச்சிதா

ஆனாலும், கிட்டத்தட்ட 90 நாட்கள் நேர்த்தியாக விளையாடி கடினமான போட்டியாளராக வலம் வந்தவர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரைச் சந்தித்தோம்.

` எமோஷன் என்கிற விஷயத்தினால் ரச்சிதா வீக் ஆகிட்டாங்களா?’

` அப்படி நான் எப்பவும் சொல்ல மாட்டேன். எமோஷன்ஸ் ஆல்வேஸ் ஸ்ட்ராங்னு நான் தீர்க்கமா நம்புறேன். பிக்பாஸ் வீட்ல லெட்டர் எழுத சொன்னப்ப என்னை அறியாமலேயே உடைஞ்சு அழுதேன். அப்படி பர்ஸ்ட் அவுட் ஆவேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. அப்ப மட்டும்தான் ஒரு வித்தியாசமான எமோஷனை உணர்ந்தேன்.’ 

ரச்சிதா

`பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த ரச்சிதா வேற, இப்ப இருக்கிற ரச்சிதா வேறன்னு சொன்னீங்களே?’

`உண்மைதான்! அந்த வயசுல நாம தான் எல்லாமேன்னு தோணும். அப்படித்தான் எனக்கும் தோணுச்சு. போகப் போக நாம பாக்குற மனுஷங்க, நாம பழகுற மனுஷங்க நம்மளை மாத்தி பக்குவப்பட வைப்பாங்க. அப்படித்தான் நான் பக்குவப்பட்டிருக்கேன். elegance, dignity இது ரெண்டையும் பிக் பாஸ் வீட்டிலிருந்து போகும்போது அப்படியே எடுத்துட்டுப் போகணும்னு நினைச்சேன். அதே மாதிரி, கொண்டு போயிருக்கேன்னு சந்தோஷமா இருக்கு.’

ரச்சிதா

`உங்களுக்கும், ஷிவினுக்குமான உறவு ரொம்ப அழகா இருந்துச்சு.. அவங்க கூட இல்லாம இப்ப எப்படியிருக்கு?’

` வெளியில் வந்த பிறகு அவளை ரொம்பவே மிஸ் பண்றேன். ஒருநாள் குவாரண்டைன்ல இருக்க சொன்னாங்க. அந்த ஒருநாள் என்கிட்ட ஃபோன் இல்ல. பிக்பாஸ் வீட்ல இருக்கிற வரைக்கும் அவளைக் கட்டிப்பிடிச்சுட்டு அவ பக்கத்துலேயே தூங்கிப் பழகிடுச்சு. அன்னைக்கு யாருமில்லாம தனியா இருந்த ஒருநாள் அவளை ரொம்ப மிஸ் பண்ணினேன். அதுக்கப்புறம் டீம் ஆட்கள் வந்து பேசினாங்க, என் மொபைல் என் கைக்கு வந்தது, அப்புறமாகத்தான் என் கூட மக்களே இருக்காங்கன்னு தோணுச்சு. ரெண்டாவது வாரத்துக்குப் பிறகுதான் நாங்க நெருக்கமாக ஆரம்பிச்சோம். அப்ப நான் அவகிட்ட, ` நீ பைனலுக்கு வரணும்னு எனக்குத் தோணுது!’ன்னு சொன்னேன். என்னை அவ ரொம்ப வேற மாதிரி பார்த்தா. அவளுடைய ஹோம் மாதிரிதான் என்னை அவ ஃபீல் பண்ணா. அவளை விட்டு பிரியும் எண்ணத்தில் தான் வீட்டை விட்டு வெளியேறும்போது அழுதேன். இல்லைன்னா அன்னைக்கு நான் நிச்சயம் அழுதிருக்க மாட்டேன்.’

ரச்சிதா

`65 கேமரா இருக்கு… அதையும் தாண்டி கேமரா மாதிரி ஒரு பர்சன் உங்களைப் பார்த்துட்டு இருந்ததாங்க. அது உங்க கேமை பாதிச்சதா?’

`நிச்சயமா அது என் வேலையை பாதிக்கல. நான் என்ன பண்ணாலும், எங்க போனாலும் கேமரா என்னை ஃபாலோ பண்ணுதோ இல்லையோ ஒரு கண் என்னைப் பார்த்துட்டே இருக்கும். அப்படியொரு பர்சன் இன்னைக்கு இல்லைன்னு தான் அவர் வெளியேறிய பிறகு சொல்லிட்டு இருந்தேன்.’

இன்னும் பல விஷயங்கள் குறித்து ரச்சிதா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.