கோவிட் நான்காவது அலை பரவாமல் இருக்க அனைத்து விமானநிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 8 ஆயிரத்து 700 விமானங்களில் 15 லட்சம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 200 பேருக்கு தொற்று இருந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலருக்கு பி.எப். 7 உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்த மாண்டவியா, இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இத்தகைய வைரசையும் முறியடிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறினார்.