உத்தரகாண்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு – மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

டேராடூன்,

உத்தரகாண்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு கவர்னர் குர்மித் சிங் தற்போது அனுமதி அளித்து உள்ளார். இதன் மூலம் இந்த மசோதா சட்டமாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த இடஒதுக்கிடு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மசோதா குறித்து ஏற்கனவே சட்டசபையில் பேசும்போது முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, ‘பிற மாநில பெண்களை விட உத்தரகாண்டில் பெண்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். சமூக நீதி, வாய்ப்பு சமத்துவம் மற்றும் பாலின சமத்துவம் போன்றவை உறுதி செய்யப்படும்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.