புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டு டிசம்பரில் 5.72 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு, பணவீக்கம் டிசம்பரில் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், ஓராண்டில் இல்லாத அளவுக்கு 5.72 சதவீதமாக சரிந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை குறைந்தது இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம் 5.88 சதவீதமாக இருந்தது. கடந்த 2021 டிசம்பரில் 5.66 சதவீதமாக இருந்தது.கடந்த டிசம்பரில் உணவுப் பொருட்கள் பிரிவில், பணவீக்கம் 4.19 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில், இது 4.67 சதவீதமாக இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி துவக்கத்தில் இருந்தே, சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாகவே இருந்து வந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் 5.88 சதவீதமாக குறைந்து, டிசம்பரில் 5.72 சதவீதமாக இறங்கி உள்ளது.
தொழில்துறை உற்பத்தி
நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம், கடந்த ஆண்டு அக்டோபரில் சரிவைக் கண்டிருந்த நிலையில், நவம்பரில் 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நவம்பரில் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது என்றும், சுரங்கத்துறை உற்பத்தி 9.7 சதவீதமாகவும், மின்சார உற்பத்தி வளர்ச்சி 12.7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement