சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியக் கலைவிழா
இனிதே நடைபெற்றது.
சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரமான சூரிச்சின் வின்ரத்தூர் நகரில் தமிழ் மக்கள் ஒன்றியம் தமது 13 வது நிறைவு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
வளர்ந்து வரும் சிறார்களை தமிழிலும்,கலையிலும்,
கலாச்சாரப் பண்பாட்டிலும் அழகே அழைத்துச் செல்லும் விழாவாக இந்நிகழ்வை ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
மொழி உணர்வு சார்ந்த பாடல்களுக்கு நடனங்கள்,
உட்பட கவிஞர் கவிதரன் தலைமையில் புலம்பெயர் சமூகத்தில் கலாச்சாரம் காப்பாற்றப்படுகிறதா?புறக்கணிக்கப்படுகிறதா? எனும் காத்திரமான பட்டி மன்றம் என்பன சுவிஸில் பிறந்த சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டது.
ஒன்றியத்திற்கு நிதி அனுசரணை வழங்கும் தொழில் அதிபர்களுக்கான கெளரவம் உரிய முறையில் வழங்கப்பட்டது.
விழாவிற்கு பிரதம விருந்தினராக எழுத்தாளர் கலாநிதி கல்லாறு சதீஷ் வருகை தந்து சிறப்புரையற்றினார்.
தமதுரையில் “கடவுளின் குழந்தையால் படைக்கப்பட்ட உலகில் ,ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கடவுளால் மகனுக்கு படைத்துக் காட்டப்பட்ட மாதிரி நாடே சுவிற்சர்லாந்து “என்றார்.
இந்த நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொடர் தலைவரோ, தனிமனித துதியோ கிடையாது, அதேபோல் சுவிஸ் வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியம், தனிநபர் துதியின்றி இருபது பேர் கொண்ட செயற்குழுவாக இயங்குவது, சில அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று வாழ்த்தினார்.