சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கான லாபகரமான விலையை வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணத்துடன் சாலையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆட்சியர் பிரதீப் குமார், தன்னுடைய காரில் இருந்து இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து விவசாயிகளிடம் வங்கம் நம் அலுவலாக்கத்திற்கு என்று பேசலாம் என்று ஆட்சியர் அழைத்து சென்று, உங்கள் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.