பொதுவாக புஷ் அப் என்பது உங்க முழு உடலையும் தசைகளையும் ஈடுபடுத்தும் ஒரு எளிய பயிற்சி ஆகும்.
இந்த புஷ்அப்பை நீங்கள் எந்த உபகரணும் இல்லாமல் செய்ய முடியும். நம்முடைய கைகளையும் கால்களையும் வைத்துக் கொண்டு இதை எளிதாக செய்ய முடியும்
.
இதனை செய்வதனால் உடலுக்கு பல்வோறு நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் புஷ் அப் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- உங்கள் தசைகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த உதவுகிறது. இதயத் துடிப்பு அதிகரித்து உடலில் ஆக்ஸிஜன் அளவும் அதிகரிக்கிறது.
- புஷ்அப் செய்வது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது நாம் வயதாகும் போது பலனளிக்கக் கூடியது.
- நீங்கள் புஷ்அப் செய்யும் போது தசைகள் வலிமையாகி உங்க வளர்ச்சிதை மாற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.
- புஷ்அப் செய்யும் போது உங்க கைகள், தோள்கள், மார்பு மற்றும் பின்புறம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் புஷ்அப் உங்களுக்கு வலிமையை அளிக்கிறது.
- புஷ் அப் பயிற்சி உங்க தோரணையை சரி செய்யவும், தோள்பட்டை, இடுப்பை வலுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவுகிறது.
- புஷ் அப்ஸ் போன்ற கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் விளைவாக உங்கள் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் எண்டோர்பின்கள் உடல் வலியை எளிதாக்குவதோடு மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
- ஒவ்வொரு நாளும் புஷ் அப் செய்வது எலும்பு இழப்பைத் தடுக்கவும், உதவும். தினசரி புஷ் அப் பயிற்சி குறைந்த முதுகுவலியைப் போக்க உதவும்.