திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்கள் சேர்த்து ஒரு கோடியே 42 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களாக உள்ள 29 கோயில்களில் பக்தர்கள் செலுத்தி உண்டியல் காணிக்கை அனைத்தும் சேகரிக்கப்பட்டு திருத்தணி மலைக்கோயில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று எண்ணப்பட்டது.
இந்த பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்ைக மற்றும் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 42 லட்சத்து 82 ஆயிரத்து 3 ரூபாய் வசூலாகி இருந்தது. இதுதவிர 555 கிராம் தங்கம், 8,862 கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திருந்தனர். இந்த காணிக்கைகள் அனைத்தும் கடந்த 19 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாகும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.