கோவை மாநகரின் அடையாளமாகவும் எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது நாகசாயி கோயில். தென் இந்தியாவின் சீரடி என பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. தென் இந்தியாவின் முதல் சாய் பாபா கோயிலான இந்த கோயில் 1939 ஆம் ஆண்டு திரு நரசிம்ம சுவாமிஜி வரதராஜ ஐயா அவர்களால் பாபாவின் மீது கொண்ட பக்தியாலும் சாய்பாபாவின் கொள்கைகளை பரப்புவதற்காகவும் சாய்பாபா பீடம் என்ற பெயரில் துவங்கப்பட்டது. 1943 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி மாலை சுமார் ஐந்து […]