“பணக்காரன் ஆவதற்காக” நரபலி கொடுக்கப்பட்ட 9 வயது சிறுவன்: பீதியில் மக்கள்


இந்தியாவில் பணக்காரர் ஆவதற்காக நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தி கொலை

குஜராத் மாநிலம் வல்சாத் வாபி நகருக்கு அருகில் உள்ள கால்வாயில் சிறுவன் ஒருவனின் சிதைந்த உடல் பயங்கரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவன் என்றும், டிசம்பர் 29ம் திகதி சிறுவன் காணாமல் போனதை தொடர்ந்து, டிசம்பர் 30 ஆம் தேதி சில்வாஸ்ஸா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

“பணக்காரன் ஆவதற்காக” நரபலி கொடுக்கப்பட்ட 9 வயது சிறுவன்: பீதியில் மக்கள் | 9 Year Old Boy Killed For Human Sacrifice RitualGetty Images

இந்நிலையில் “பணக்காரன் ஆவதற்காக” கொடூரமான நபர்களால் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் சிறுவன் பலி கொடுக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர்.

இந்த கொடூரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் வார்லி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி சிறுவன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு, வீசப்படுவதற்கு முன்பு அவரது எச்சங்கள் சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பணக்காரன் ஆவதற்காக” நரபலி கொடுக்கப்பட்ட 9 வயது சிறுவன்: பீதியில் மக்கள் | 9 Year Old Boy Killed For Human Sacrifice RitualGetty Images

பொலிஸார் விசாரணை 

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்கள் மற்றும் டீனேஜ் பையன் ஒருவனை பொலிஸார் கைது செய்து இருப்பதாக  தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையில் இளம் குற்றவாளி டிசம்பர் 29, 2022 அன்று, சைலி கிராமத்தில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுவனை கடத்தி சென்று தனது கூட்டாளியின் உதவியுடன் நரபலியாகக் கொன்றதை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நரபலிக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களுடன் எச்சங்கள் ஆகியவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 

“பணக்காரன் ஆவதற்காக” நரபலி கொடுக்கப்பட்ட 9 வயது சிறுவன்: பீதியில் மக்கள் | 9 Year Old Boy Killed For Human Sacrifice Ritualpolice-line



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.