பெண்களையும், ஆதி குடிகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் சிறுமைப்படுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவன்
தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.
அதேபோல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது என்று அவர் கூறிவருகிறார்.
மேலும் மனுஸ்மிருதியில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் தமிழ்படுத்தப்பட்ட புத்தகங்களையும் மக்களிடையே வழங்கி வருகிறார். தமிழகத்தை போல் கேரளாவிலும் மனுஸ்மிருதி குறித்து அதிருப்தி கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், கேரள அமைச்சரும் கம்யூனிஸ்ட் தலைவருமான எம்.பி.ராஜேஷ், மனுஸ்மிருதி ஒரு கொடூரமான சாதி அமைப்பை ஆதரிப்பதாகக் கூறி அறிக்கையை வெளியிட்டார்.
வர்கலா சிவகிரி மடத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேஷ், “கேரளாவுக்கு ஒரு ஆச்சாரியார் இருக்கிறார் என்றால், அது ஸ்ரீ நாராயண குரு தான், ஆதி சங்கராச்சாரியார் அல்ல” என்று கூறியிருந்தார். இந்தநிலையில் இந்த அலை தற்போது பீகாரிலும் பரவி வருகிறது. பீகார் கல்வி அமைச்சர், மனுஸ்மிருதி சமூகத்தை பிளவுபடுத்துவதாக கூறியுள்ளார்.
பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் நேற்று நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், ‘‘ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ராமசரிதமானஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் மீண்டும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது.
ராம்சரித்மனாஸுக்கு ஏன் எதிர்ப்பு வந்தது? கல்வியைப் பெற்ற பின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ்மிருதி’ சமூகத்தை பிளவுபடுத்துகிறது. மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் ஆகியவை காவி சித்தாந்தவாதியான கோல்வால்கரின் எண்ணங்களின் கொத்து வெறுப்பைப் பரப்பியது. வெறுப்பு அல்ல, அன்பே நாட்டைப் ஒண்றிணைக்கிறது.
சாதி மற்றும் மொழியை பயன்படுத்தி பிரிவினை; ராகுல் காந்தி சாடல்.!
மரியாதைக்குரிய இந்து மத நூல்களான மனுஸ்மிருதி, ராமசரிதமானஸ் போன்றவை தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் கல்வி கற்கும் எதிரானவை’’ என அவர் கூறினார். அவரது இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. கோரிக்கை விடுத்தது. ஆனால் தன் கருத்தில் உறுதி இருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சர், உண்மை அறியாத காவிகள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.