ராணிப்பேட்டை :வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ‘பூட்ஸ்’ காலுடன் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் மற்றும் செருப்பு அணிந்து தி.மு.க.,வினரும் பொங்கல் விழா கொண்டாடியதால் பொதுமக்கள் வேதனையடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா நடந்தது.மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பூட்ஸ் காலுடன் பங்கேற்று பொங்கல் வைத்து விழா கொண்டாடினார்.
மேலும் தி.மு.க.,வை சேர்ந்த வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட்ரமணன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம் உள்ளிட்ட தி.மு.க.,வினர் பலரும் இந்த விழாவில் காலில் செருப்பு அணிந்தே பங்கேற்றனர்.இதை பார்த்து முகம் சுளித்த பொதுமக்கள் தமிழ் தெரிந்த மாவட்ட கலெக்டர் பூட்ஸ் காலுடனும் தி.மு.க.,வினர் செருப்பு அணிந்தும் பொங்கல் விழா
கொண்டாடியது தான் ‘திராவிட மாடல் ஆட்சியா’ என வேதனையுடன் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement