அமெரிக்காவின் நார்த் கரோலினாவை சேர்ந்த ரெபேக்கா பவல் என்ற அதிர்ஷ்டசாலி பெண் ஒருவர் தனது முதல் லொட்டரியிலேயே £123,500 தொகையை பரிசாக வென்று அசத்தியுள்ளார்.
முதல் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் உள்ள வீவர்வில்லேவைச் சேர்ந்த ரெபேக்கா பவல் என்ற பெண் ஜனவரி 7ம் திகதி சனிக்கிழமை லொட்டரியில் திடீரென கலந்து கொள்ள முடிவு செய்தது வாழ்நாளில் தனது முதல் லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
லொட்டரி வெற்றியை எதிர்பார்க்காத ரெபேக்கா, டிரா முடிந்த பல மணி நேரம் கழித்த பிறகும் தனது டிக்கெட்டைச் சரிபார்க்கவில்லை, ஆனால் இறுதியாக அவள் முடிவுகளை பார்த்தப்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்றை தான் பெற்று இருப்பதை கண்டுபிடித்தார்.
(North Carolina Education Lottery/Newsflash)
வெற்றி பெற்ற ரெபேக்காவின் டிக்கெட்டுகள் நான்கு வெள்ளை பந்துகள் மற்றும் சிவப்பு நிற பவர்பால் ஆகியவற்றின் $50,000 பரிசு எண்களுடன் பொறுத்தப்பட்டது. ஆனால் 3x பவர் ப்ளே மல்டிபிளையர் வெற்றிக்கு பிறகு பரிசு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் வரிகளுக்குப் பிறகு, ரெபேக்கா நம்பமுடியாத £87,890 ($106,876) வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
புதிய வீடு வாங்க திட்டம்
வெற்றி பிறகு நார்த் கரோலினா கல்வி லொட்டரியிடம் ரெபேக்கா பேசிய போது, “நான் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன். கடையில் இருந்த பெண்ணும் என்னிடம், ‘உனக்கு தொடக்க நிலை அதிர்ஷ்டம் உண்மையிலேயே உள்ளது’ என்று கூறினார் என தெரிவித்துள்ளார்.
Adobe
மேலும் பரிசு தொகையை கொண்டு புதிய கார் மற்றும் புதிய வீட்டை வாங்க போவதாகவும் மீதி எஞ்சிய தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் ரேபேக்கா தெரிவித்துள்ளார்.
ரெபேக்கா தனது முதல் லொட்டரியிலேயே £123,500($150,000) வென்ற பிறகு, உலகின் அதிர்ஷ்டசாலி பெண் என்று அழைக்கப்படுகிறாள்.