ரோமின் வாடிகன் நகரில் மாயமானதாக கூறப்படும் இளம்பெண் போப்பின் நண்பர் ஒருவரால் கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளது.
போப்பின் நண்பரால்
குறித்த விவகாரம் தொடர்பில் மறு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
சம்பவத்தின் போது 15 வயதேயான இமானுவேலா ஓர்லாண்டி மதியத்திற்கு மேல் திடீரென்று மாயமானார்.
@AP
1983 ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில் இதுவரை துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வருகின்றனர்.
புல்லாங்குழல் இசை கற்றுவந்த இமானுவேலா ஓர்லாண்டி, வகுப்புக்கு சென்ற நிலையிலேயே மாயமானார்.
தற்போது இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, ஆவணப்படம் ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமானுவேலா ஓர்லாண்டியை வாடிகான் நிர்வாகமே லண்டனுக்கு ரகசியமாக அனுப்பி வைத்ததாகவும், அங்கே அவர் 14 ஆண்டுகள் வாழ்ந்து வந்ததாகவும், 29வது வயதில் அவர் இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
@AP
ஆனால் அவரது சடலம் ரோமுக்கு எடுத்துவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தற்போது வாடிகான் முழுமையான விசாரணைக்கு ஒப்புக்கொண்டதுடன், உண்மை வெளிவரும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
உண்மை ஒருபோதும் வெளிவராது
ஆனால் வாடிகான் உறுதி அளித்தாலும், உண்மை ஒருபோதும் வெளிவராது என்றே கூறுகின்றனர்.
மறைந்த போப் இரண்டாம் ஜான் பாலின் நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரே ஓர்லாண்டியை கடத்திச் சென்று சீரழித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.
100 ஆண்டுகள் பழமையான ஓர்லாண்டி குடும்பம் இதுவரை 7 பாப்பரசர்களின் கீழ் பணியாற்றியுள்ளது.
இதனால் வாடிகன் பூங்காவில் ஓர்லாண்டி குடும்பத்து சிறார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
@shutterstock
அப்படியான ஒரு சூழலில், ஓர்லாண்டி மாயமாவதற்கும் ஒரு வாரம் முன்பு வாடிகன் பூங்காவில் வைத்து அவர் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
இந்த நிலையில் தான் இசை வகுப்புக்கு சென்றவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கூறுகின்றனர்.