வீடுகளில் பாத்திரம் கழுவி, துணிகளை துவைத்து கிடைக்கும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்த ஏழை பெண் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
வறுமையில் வாடிய குடும்பத்துக்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் புதுல் ஹரி. நடுத்தர வயது பெண். இவர் கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் உடல்நிலை சரியில்லாத மகனின் மருத்துவ செலவுக்கும், மகளின் திருமண செலவுக்கும் பணமில்லாமல் தம்பதி தவித்து வந்தனர், இதன் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கியிருந்தனர்.
இதையடுத்து குடும்பத்தை காப்பாற்ற புதுல் சில வீடுகளில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அரசு லொட்டரி டிக்கெட்டை புதுல் ரூ. 30 கொடுத்து சமீபத்தில் வாங்கிய நிலையில் அதற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
News18
கடனை அடைப்பேன்
இவ்வளவு பெரிய பரிசை வென்றதும் அச்சத்திலும், பீதியிலும் என்ன செய்வது என தெரியாமல் புதுல் காவல்துறையை அணுகினார்.
புதுல் கூறுகையில், பரிசு பணத்தை வைத்து கடனை அடைப்பதன் மூலம் நிம்மதி கிடைக்கும்.
மேலும் ஒரு வீட்டை கட்டுவதோடு மகனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.
எப்படியிருந்தாலும் தனது வேலையை விடமாட்டேன் எனவும் புதுல் தெரிவித்துள்ளார்.