உக்ரைன் நகரான சோலேடாரில் நடைபெற்று வரும் போர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
போர் தாக்குதலில் சோலேடார்
உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான சோலேடாரில் கடந்த சில நாட்களாக ரஷ்ய படைகள் மிகத் தீவிரமான போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்றிரவு இந்த நகரை ரஷ்ய படைகள் முழுவதுமாக கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
Sky News
ஆனால் இந்த கைப்பற்றலை உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறுத்துள்ளார், அத்துடன் சோலேடார்(Soledar) இன்னும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புகளுக்கு Soledar ஒரு முக்கியமான ஆதாயமாக இருக்கும், ஏனெனில் அதைக் கைப்பற்றுவது உக்ரேனிய நகரமான பாக்முட் மீது அவர்கள் தாக்குதல் நடத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
இதற்கிடையில் சோலேடார் அருகே 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெலிகிராம் வெளியாகியுள்ள தகவலில், உக்ரைன் வீரர்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களின் ஒருங்கிணைந்த பணியால் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக நாட்டின் சிறப்பு படைகள் தெரிவித்துள்ளனர்.
Sky News
உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலில் டோச்கா-யு தொடு ஏவுகணை மற்றும் நவீன பல ராக்கெட் ஏவுதள அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.