யூடியூபில் நடிகைகளை பேட்டியெடுத்து பிரபலமான தொகுப்பாளர் நிக்கி என்கிற நிக்கிலேஷ், தனியார் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்றிரவு புரசைவாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் அலுவலகத்தில் பணியாற்றிவரும் ராஜேஷ் என்பவருக்கும், நிக்கிலேஷூக்கும் வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் சாரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் தொகுப்பாளர் நிக்கிலேஷின் முகத்தில் வீக்கம் ஏற்பட்டது. மற்றொரு நபரான ராஜேஷுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து வேப்பேரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் நிக்கிலேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் ஏற்படுத்துதல், பிறரை தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தொகுப்பாளர் நிக்கிலேஷ் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in