அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள்: விசாரணைக்கு உத்தரவு| US Special Counsel To Probe Biden’s Handling Of Classified Documents

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், கடந்த 2009 முதல் 2017 வரை அந்நாட்டின் துணை அதிபராக பதவி வகித்திருந்தார். அந்த காலக்கட்டத்திலான அரசின் ரகசிய ஆவணங்கள் தற்போது ஜோ பைடனின் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

latest tamil news

அரசின் அதிமுக்கிய ரகசிய ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தது குறித்து ராபர்ட் ஹூர் தலைமையில் விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.