மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் இரு குழுவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூக பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைத்து, அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் […]