அஸிவால்: மியான்மர் இந்திய, எல்லைப்பகுதியான மிசோரம் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி படையினர் மீது மியான்மர் ராணுவம் வான் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
இந்திய -மியான்மர் எல்லைப்பகுதியில் நமது மாநிலமான மிசோரம் மாநிலம் உள்ளது. இங்குள்ள சம்ப்பை மாவட்டத்தில் அருகே மியான்மர் எல்லைக்கோடு செல்கிறது. இங்கு கவு்பங்க், பர்க்வான் ஆகிய வனப்பகுதிகளில் மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி பேராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆதரவு கிளர்ச்சிபடையினர் உள்ளனர்.தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில் சம்ப்பை கிராமப்பகுதியில் மியான்மர் ராணுவம் ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி படையினர் மீது குண்டு வீசி வான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த எல்லையில் ஒட்டியுள்ள நமது மிசோரம் மாநில கிராமவாசிகள் பீதியில் உள்ளனர். தொடர்ந்து குண்டுவீச்சு மழை பொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement