எல்லையில் நிலைமையை கணிக்க முடியாது: ராணுவ தளபதி தகவல்

புதுடெல்லி: சீனா உடனான வடக்கு எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் கணிக்க முடியாததாக உள்ளதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தையொட்டி ராணுவ தளபதி மனோஜ் பாண்டே டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, ‘‘சீனாவுடனான வடக்கு எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால் கணிக்க முடியாததாக இருக்கிறது.

எந்த சவால் வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்னர். நமது வீரர்கள் வலுவான நிலையை பராமரித்து வருகின்றனர். மொத்தமுள்ள 7 பிரச்னைகளில் 5 பிரச்னைகளுக்கு இரு தரப்பும் தீர்வு கண்டுள்ளது. இரு நாட்டுக்கும் இடையே ராணுவ மற்றும் அரசு ரீதியிலான பேச்சுவார்த்தை தொடரும். தீவிரவாதம் மற்றும் தீவிரவாத கட்டமைப்புக்கு எல்லை தாண்டிய ஆதரவு இருக்கிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.