ஒருங்கிணைந்து வெடித்த வெடிகுண்டுகள்…மாலியில் பலியான 14 ராணுவ வீரர்கள்


மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் வரை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 14 இராணுவ வீரர்கள் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக அந்த நாட்டின் ராணுவம் தெரிவித்த தகவலில், நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டியா, டியாஃபரபே ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து வெடிக்கச் செய்ததில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

ஒருங்கிணைந்து வெடித்த வெடிகுண்டுகள்…மாலியில் பலியான 14 ராணுவ வீரர்கள் | Malawi Soldiers Death Toll Rise To 14

இதற்கு பதிலடியாக ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத குழுக்கள்

மாலியில் அல்-காய்தா மற்றும் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
2020ம் ஆண்டு ஆட்சியை மாலி இராணுவ படை கைப்பற்றி இருந்தது, இதனை தொடர்ந்து பிரான்ஸ் படையினர் மாலியை விட்டு வெளியேறினர்.

ஆனால் பிரான்ஸ் படையினர் வெளியேறியதை அடுத்து பயங்கரவாத குழுக்கள் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதனால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டு ராணுவம் திணறி வருகிறது. 

ஒருங்கிணைந்து வெடித்த வெடிகுண்டுகள்…மாலியில் பலியான 14 ராணுவ வீரர்கள் | Malawi Soldiers Death Toll Rise To 14



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.