கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.1,250க்கு விற்கப்பட்ட பிச்சி ரூ.2,000 ஆகவும் மல்லிகை கிலோ ரூ.1700ல் இருந்து ரூ.2500 ஆகவும், அரளி கிலோ ரூ.320ல் இருந்து ரூ.450ஆகவும், ரோஜா ரூ.200ல் இருந்து 260ஆகவும் விலை அதிகரித்துள்ளது.