புதுடில்லி, ”சீனாவுடனான எல்லை பிரச்னை நிலையாக உள்ளது; அதே நேரத்தில் கணிக்க முடியாத வகையில் உள்ளது,” என, இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறினார்.
ராணுவ தின கொண்டாட்டத்தையொட்டி, இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேசியதாவது:
சீனாவுடனான எல்லை பிரச்னையில் ஏழு முக்கிய அம்சங்கள் குறித்து, இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.
சீன எல்லை பிரச்னை தற்போதைக்கு நிலையாக இருந்தாலும், கணிக்க முடியாத வகையில் உள்ளது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, இரு தரப்புக்கும் இடையே துாதரக அளவிலும், ராணுவ கமாண்டர்கள் அளவிலும் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.
சீன எல்லையில், நம் வீரர்கள் போதிய அளவில் கண்காணிப்பில் உள்ளனர்.
சீன வீரர்கள் எத்தனை பேர் உள்ளனரோ, அதே அளவுக்கு நம் வீரர்களும் உள்ளனர். சீன வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை சந்திக்க நம் வீரர்கள் தயாராக உள்ளனர்.
பீரங்கி பிரிவில் பெண்கள்: நம் ராணுவத்தில் பீரங்கிகளை கையாளும் பிரிவிலும், ராக்கெட் ஏவும் திட்டத்திலும் பெண்கள் படைப் பிரிவினரை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், உடனடியாக அதற்கான நடவடிக்கை துவங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement