ஜனவரி 16.., ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் விலை ஜனவரி 16 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இ.ஐ.சி.எம்.ஏ  மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் மீட்டர் பைக் 650 சிசி இன்ஜினை கொண்ட மாடலாகும்.

Astral, Interstellar மற்றும் Celestial என மூன்று வேரியண்ட்களில் வரவுள்ள பைக்கில் என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்கள் ஒன்றாக அமைந்திருக்கின்றது. ஆனால் சில கூடுதல் ஆக்செரிஸ் வசதிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே மாறுபட்டிருக்கும்.

இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி என இரு மாடல்களில் பயன்படுத்தப்பட்ட அதே 648சிசி, இணை-இரட்டை சிலிண்டர் என்ஜின் உள்ளது. இருப்பினும், பவர் 46.2bhp சற்றே குறைவாக உள்ளது. இது 7,250rpm இல் வருகிறது. டார்க் அவுட்புட் 52Nm மாறாமல் இருந்தாலும், 5,650rpm -ல் வருகிறது.

43 மிமீ USD ஃபோர்க்  உள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் கையாளப்படுகிறது, இது இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதன்முறையாக சூப்பர் மீட்டியோர் மூலமாக யூஎஸ்டி ஃபோர்க் அப்சார்பரை வழங்குகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.