தேர்தல்களில் பணப் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கவலை தெரிவித்துள்ளது.
பணத்தின் மூலம் வாக்குகளை விலைக்கு வாங்கும் போக்கைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் பணப் புழக்கம் தொடர்பான பொது நலவழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2010 பீகார் சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவுகள் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மனுதாரர் பதிலளிக்க அவகாசம் அளித்து, அடுத்த விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.