ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு செய்ய உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி கிராமத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்து மதத்தை சேர்ந்த 3 குடும்பங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்திலலும் டோங்கிரி கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஜம்மு செல்கிறார். டோங்கிரி கிராமத்திற்கு செல்லும் அமித்ஷா அங்கு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா ஜம்முவின் டோங்கிரி கிராமத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
newstm.in