பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயிலின் தொடக்க விழா மற்றும் ரூ.7 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, செகந்திராபாத் விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரெயில் போக்குவரத்து சேவையை தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
செகந்திராபாத், மகபூப் நகர் இடையே 85 கி.மீ. தொலைவிற்கு இரட்டை ரெயில் பாதை திட்டம், ஐதராபாத் ஐ.ஐ.டி வளாகத்தில் புதிய அகாடமி கட்டிடம், தொழில்நுட்ப பூங்கா, தங்கும் விடுதி கட்டிடம், விருந்தினர் மாளிகை, சுகாதார மையம் போன்றவற்றின் தொடக்க விழா மற்றும் செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் ரூ.699 கோடி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா என மொத்தம்ரூ.7 ஆயிரம் கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைப்பதாக இருந்தது.
இந்நிலையில், திடீரென பிரதமரின் ஐதராபாத் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது மோடியின் சுற்றுப்பயணம், விரைவில் மாற்று தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.