பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய நேரத்தில், நாமும் அதேபோல வெளியேறவேண்டும் என சில நாடுகளிலிருந்து குரல்கள் ஒலித்தது நினைவிருக்கலாம்.
இப்போதும் அந்நாடுகள் அப்படியே நினைக்கின்றனவா?
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிரெக்சிட் நிறைவேறியது. அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அந்த காலகட்டத்தில் வேறு சில நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து கருத்துக்கள் தெரிவித்திருந்தன.
ஆனால், பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் பல உரசல்கள் ஏற்பட்டன. பிரித்தானியாவில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அதற்குக் காரணம் பிரெக்சிட்தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
Photo by Niklas HALLE’N / AFP
பிரித்தானியாவைக் கண்டு பிரான்ஸ் முதலான நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்?
இந்நிலையில், அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்த நாடுகள் இப்போதும் அதே மன நிலையில் இருக்கின்றனவா என்பதை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வு முடிவுகள் பெரிய மாற்றங்களைக் காட்டியுள்ளன.
பிரான்சைப் பொருத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தோரின் எண்ணிக்கை 7.6 புள்ளிகள் குறைந்துள்ளது.
சரி, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கலாமா என கேள்வி எழுப்பப்பட்டபோது, நீடிக்கலாம் என்று அதிக பதில் கிடைத்தாலும், ஆச்சரியத்துக்குரிய வகையில், எல்லா நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கலாம் என பதிலளிக்கவில்லை.
பிரான்சைப் பொருத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கலாம் என பதிலளித்துள்ளோரின் எண்ணிக்கை 6.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
விடயம் என்னவென்றால், பல நாடுகளில் உள்ளவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கலாம் என்றோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கவேண்டாம் என்றோ பதிலளிக்காமல், தங்களுக்கு என்ன முடிவு செய்வதென தெரியவில்லை என இப்போதும் பதிலளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் ,மொத்தத்தில் பார்க்கும்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் பிரித்தானியா படும் அவதியைக் கண்டு மற்ற நாடுகள் கொஞ்சமாவது பாடம் கற்றுக்கொண்டுள்லதுபோலத்தான் தோன்றுகிறது.
பிரான்சைப் பொருத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துவந்த அரசியல் கட்சிகள் கூட, இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.