மாலியில் ஜிஹாதிகளுடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய மாலியில் மோப்டி மற்றும் செகோவ் நகரங்களுக்கு இடையே கண்ணிவெடிகள் மூலம் ராணுவத்தினர் தாக்கப்பட்டதையடுத்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலில் இதுவரை 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளநிலையில், ஜிஹாதிகள் தரப்பில் 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.