லண்டனில் பலரை கொத்தாக பலிவாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு… தீயணைப்பு வீரர்களுக்கு கிடைத்த பரிசு: நொறுங்க வைக்கும் தகவல்


லண்டனில் 72 பேர்களை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்தில் உயிரைக் கொடுத்து போராடிய தீயணைப்பு வீரர்கள் பலர் தற்போது குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குணப்படுத்த முடியாது புற்றுநோய் உறுதி

2017ல் லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய Grenfell Tower தீ விபத்தில் மொத்தம் 72 பேர்கள் பலியாகினர்.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர்களாக செயல்பட்டவர்களில் ஒரு டசினுக்கும் மேற்பட்டவர்களுக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

லண்டனில் 72 பேரை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்து! தீயணைப்பு வீரர்களுக்கு புற்றுநோய்? | Grenfell Tower Firefighters Diagnosed Cancer

@LNP

ஆனால், இது முதற்கட்ட தகவல் மட்டுமே எனவும், சில வகை புற்றுநோயானது அறிகுறிகள் தென்பட 25 ஆண்டுகள் வரையில் எடுத்துக்கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர்.
Grenfell Tower தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களில் 6 மாத குழந்தை முதல் 84 வயது ஷீலா ஸ்மித் என்ற பெண்மணி உட்பட 72 பேர்கள் பலியாகினர்.

இந்த விபத்தில் சிக்கி, உயிர் தப்பியவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பலரும் தற்போது மருத்துவ சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
Grenfell Tower தீ விபத்தில் பணியாற்றிய தீயணைப்பு வீரர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வெளியானாலும், இந்த எண்ணிக்கை 20க்கும் அதிகமிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

லண்டனில் 72 பேரை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்து! தீயணைப்பு வீரர்களுக்கு புற்றுநோய்? | Grenfell Tower Firefighters Diagnosed Cancer

@shutterstock

20க்கும் அதிகமிருக்கலாம்

சுமார் 10 மணி நேரத்திற்கு அதிகமாக தீயணைப்பு வீரர்கள் சம்பவப்பகுதியில் இருந்துள்ளனர்.
சிலர் கரும்புகை சூழ்ந்த பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளனர்.

மேலும், குறித்த தீ விபத்தில் சுமார் 1,300 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் தான், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சுகாதார பரிசோதனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

லண்டனில் 72 பேரை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்து! தீயணைப்பு வீரர்களுக்கு புற்றுநோய்? | Grenfell Tower Firefighters Diagnosed Cancer

@shutterstock

2019ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.