லெனோவா அறிமுகம் செய்த புதிய 5G டேப்லெட்! அட்டகாசமான 2K டிஸ்பிலே வசதி!

இந்தியாவில் உள்ள டேப்லெட் சந்தையில் லெனோவா நிறுவனம் அதன் புதிய Tab P11 5G மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட் Qualcomm Snapdragon 750G 5G சிப் உள்ளது. இதில் 60 GHZ 5G நெட்ஒர்க் இணைப்பு உள்ளதால் நமக்கு அதிவேக இணைய வேகம் கிடைக்கும். இந்த டேப்லெட் என்பது லெனோவா தற்போது விற்பனை செய்யும் Tab P11 Plus மற்றும் Tab P11 Pro ஆகிய இரு மாடல்களுக்கு நடுவில் உள்ள வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும். இதன் Tab P11 Pro அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் இதில் 5G வசதி இல்லை.

விலை விவரம் (Lenovo Tab P11 5G Price)இந்த Tab இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 128GB ஸ்டோரேஜ் மாடல் 29,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 34,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதை நாம் Amazon, Lenovo.com ஆகிய வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த Tab Xiaomi மற்றும் Realme ஆகிய மிட் பட்ஜெட் 5G டேப்லெட் செய்யப்படுகிறது. தற்போது செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படும் Xiaomi Pad 5 (128GB) 26,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், Realme Pad X (64GB) 25,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.இதன் Lenovo Tab 11 Plus 24,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், Lenovo Tab 11 Pro 35,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவை இரண்டிலும் 5G சேவை எதுவும் இடம்பெறாமல் உள்ளது.
Lenovo Tab P11 5G விவரம் டிஸ்பிலே வசதிஇந்த டேப்லெட் 11 இன்ச் 2K (2000×1200) pixels resolution IPS டிஸ்பிலே வசதி உள்ளது. இதனுடன் Dolby Vision Content, 60HZ refresh rate உள்ளது. இது தற்போது Android 11 OS கொண்டு இயங்கினாலும் விரைவில் இதில் Android 12 அப்டேட் வெளியாகும்.
கேமரா வசதி கேமரா திறனை அதிகரிக்க 13MP மெயின் கேமரா மற்றும் முன்பக்கம் 8MP கேமரா வசதி உள்ளது. இதில் நமக்கு 3D இமேஜிங், gesture recognition போன்ற வசதிகளும் உள்ளன.
பேட்டரி பேட்டரி வசதியாக மிகப்பெரிய 7700mAh பேட்டரி உள்ளது. இதில் 20W சார்ஜிங் வசதியும் உள்ளது. இதனுடன் ப்ளூடூத் 5.1, WiFi 6, USB-C 3.2 Gen 1 உள்ளது. இதனால் நாம் தொடர்ந்து 12 மணிநேரம் இடைவிடாமல் வீடியோக்களை பார்த்து ரசிக்கமுடியும்.
மற்றவை இதனுடன் நமக்கு தனியாக Lenovo Precision Pen 2 மற்றும் keyboard போன்ற பொருட்கள் தனியாக வாங்கமுடியும். இதன் ஆடியோ திறனை அதிகரிக்க Dolby Atmos வசதி கொண்ட JBL ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.